அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகையான ‘டைம்ஸ்’ பத்திரிகை தனது வாசகர்கள் மூலம் உலகின் பிரபலங்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து வெளியிட்டு வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான பிரபலங்கள் பட்டியலை கடந்த சில நாட்களாக தயாரித்து வந்தது. இந்த நிலையில் தற்போது இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் ஒரே ஒரு ஓட்டு கூட வாங்காமல் இந்த பட்டியலிலே இந்திய பிரதமர் மோடி இடம்பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
கனடா பிரதமர் ஐஸ்டின் டிருடியோ, போப் ஆண்டவர் பிரான்சிஸ், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ், பேஸ்புக் தலைமை அதிகாரி மார்க்ஷுகர் பெர்க் ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
பிரதமர் மோடியை போலவே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சகன் நேதன் பாரு, வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் டீன் ஸ்பெசர், டிரம்பின்மாள் இவாங்கா அவரது கணவர் ஜாரட்குஷ்னர் ஆகியோருக்கும் ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.