மாயமான மலேசிய விமானம் MH370: விபத்தில் சிக்கியதாக அறிவிப்பு

வெள்ளி, 30 ஜனவரி 2015 (09:59 IST)
மாயமான மலேசிய விமானம் MH370 விபத்துக்குள்ளாகிவிட்டது என்று மலேசியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Floating 122 objects seen in Flight 370 search area


மலேசிய பிரதமர், “MH370 விபத்துக்குள்ளாகிவிட்டது என்றும், மாயமான விமானத்தில் பயணித்த பயணிகளின் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளதோடு  விமானத்தைத் தேடும் பணி மேலும் தீவிரப்படுத்தப்படும் எனவும் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 
 
விமான தேடல் பணியில் ஆஸ்திரேலியா மற்றும் சீனாவும் தங்களது உதவியை வழங்குவார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
 
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த MH370 விமானம் கடந்த மார்ச் 8 ஆம் தேதி மாயமானது.
 
கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் பெய்ஜிங் சென்றபோது மாயமான மலேசியா விமானம் என்ன ஆனது என்பது தெரியவில்லை. விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்தது விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்பட்டது. விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என்றும் கூறப்பட்டது.
 
இந்நிலையில், விமானத்தை தேடும் பணியில், ஆஸ்திரேலியா, சீனா மற்றும் மலேசியா நாட்டை சேர்ந்த மீட்பு குழு ஈடுபட்டது. அதிலும் எந்த பலனும் கிடைக்கவில்லை.
 
இந்திய பெருங்கடலின் ஆழத்தில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் தேடுதல் வேட்டையும் தோல்வியிலே முடிந்தது.
 
மாயமான விமானம் தொடர்பான மர்மம் இன்றுவரையில் வெளியாகவில்லை. இந்நிலையில் மாயமான மலேசிய விமானம் விபத்தில் சிக்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்