உலகின் மிகவும் பிரபலமான மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனம்தான். அதே போல செல்போன் தயாரிப்பில் புகழ்பெற்ற நோக்கியா நிறுவனத்தை வாங்கிய பின்பு, அதன் மூலம் ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் அதற்கான மென்பொருள் உருவாக்குவதில் மைக்ரோசாப்ட் நிறுவனம் புகுந்துவிளையாடியது.
இந்த நிலையில், வியாபாரச் சந்தையில் ஆண்ட்ராய்டு உடன் போட்டி போட முடியாமல் மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடர் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது. இதனையடுத்து, ஸ்மார்ட்போன் வர்த்தகத்திலிருந்து 1,850 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அறிந்த ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.