மாயமான விமானம்: மனித வரலாற்றில் மிககடினமான தேடல் வேட்டை - ஆஸி. பிரதமர்!

திங்கள், 28 ஏப்ரல் 2014 (13:28 IST)
மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370-ஐ இனி கடலின் மேற்பகுதியில் கண்டுபிடிக்க முயல்வது வீணே, கடலின் மேலும் ஆழமான இடங்களில் அதிக பரப்பளவில் தேடுதல் வேட்டை நடத்தினால் 8 மாதங்களுக்கும் மேல் கூட ஆகிவிடும் என்று ஆஸ்ட்ரேலிய பிரதமர் டோனி அப்பாட் கூறியுள்ளார்.
 
"மானுட வரலாற்றிலேயே மிகவும் கடினமான தேடுதல் வேட்டை" இதுவாகத்தான் இருக்கும் என்று அவர் இந்த மிஷனை வர்ணித்துள்ளார்.
 
தேடுதல் வேட்டை அடுத்தக் கட்டத்தை தாண்டியுள்ளதாக கூறிய அபாட், தனியார் ஒப்பந்ததாரர்களையும் இப்போது ஈடுபடுத்தப்படுகின்றனர் இதற்கு 60 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும்.
 
'சொல்ல மிகவும் வருத்தமாகவே உள்ளது, இதுவரையிலான எங்கள் தேடுதல் வேட்டையில் விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை' என்றார் அபாட்.
 
52 நாட்கள் தேடுதல் வேட்டை நடத்தியுள்ளோம் இப்போது விமானத்தின் பாகங்கள் ஏதாவது கடல் நீரின் மேற்புறத்தில் வந்திருந்தால் கூட அதுவும் நீர் நிரம்பி அடியில் சென்றிருக்கும்.
 
இதனால் கடல் தரையில் தேடுதல் வேட்டை நடத்தவேண்டும் அதுவும் சுமார் 60,000 கிமீ சதுர கிமீ பரப்பளவுக்கு தேடுதல் வேட்டை விஸ்தீர்க்கப்படவேண்டியுள்ளது. இது 6 அல்லது 8 மாதங்கள் பிடிக்கும் வேலையாகும்.
 
இவ்வாறு கூறியுள்ளார் ஆஸ்ட்ரேலிஅ பிரதமர் டோனி அபாட்.

வெப்துனியாவைப் படிக்கவும்