டுவிட்டரில் பிகினி உடையில் பெண் நீதிபதி புகைப்படம்

வெள்ளி, 7 நவம்பர் 2014 (10:02 IST)
மோல்டோவியா நாட்டின் தலைநகர் சிசினவ் நகரை சேர்ந்தவர் மரியா கோசமா (வயது 27). இவர் நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதி மைக்கேல் பாலுங்கி (வயது 52) பேத்தியாவார், மரியா சமீபத்தில் தான் பிரதான குற்றவியல் நீதிமன்றமான சென்ரு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது இந்த அழகிய நீதிபதி  நாட்டின் பழமைவாதிககளின் விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளார்.
 
தனது விடுமுறை நாட்களை கொண்டாட சென்றார். தற்போது இவர் எடுத்து கொண்ட பிகினி புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த பலர் பெண் நீதிபதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். பலவேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
 
நீதிபதிகள் சமுதாய செய்தி தொடர்பாளர் கூறும்போது, நாம் நமது தொழிலில் மரியாதைகுரியதாகவும், தீவிரமாகவும் இருக்க வேண்டும். இது குற்றவாளிகளுக்கு மகிழ்ச்சியை தூண்டும். துரதிர்ஷ்டவசமாக அவர்  நமது குடுமபத்தைச் சேர்ந்தவராக உள்ளார். அதற்கு நாம் என்ன செய்யமுடியும். ஆனால் பெண் நீதிபதிகள் இது போன்ற உதாரணங்களை பின்பற்ற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கிறேன் என கூறினார்.
 
நீதிபதியின் இந்த பிகினி போட்டோ பெண்கள் இயக்கத்தினரிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
நாடாளுமன்ற பெண் உறுப்பினர் நடாலியா சிமொட்டரி கூறும்போது, அவர் சிறப்பாக செய்து உள்ளார். ஆனால்  அவரது இந்த புகைப்படம் மற்ற பெண்களை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும் என நினைக்கிறேன். யாரும் இதை அவர் செய்ததாக கூறி விட முடியாது ஆனால் இது தவறான எண்ணைத்தை ஏற்படுத்திவிடும். அனைவரும் இந்த புகைப்படத்தை எதிர்க்கிறார்கள் என கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்