காரணம், மீன் பிடிப்பதற்காக வீசப்படும் தூண்டில் அவரது உறுப்பில் மாட்டியிருந்தது. சுற்றிப் பார்த்த போது, அங்கு ஒருவர் தூண்டிலுடன் நின்று கொண்டிருந்தார். தூண்டிலை எடுக்க முயன்றுள்ளார். ஆனால் அவரால் முடியவில்லை. எனவே தூண்டில் போட்டவரை நோக்கி நீந்தி, கரைக்கு சென்று தூண்டிலை எடுக்க முயன்றுள்ளார். அப்போதும் முடியவில்லை. இதனால் அந்த மீனவர் தூண்டிலின் ஒரு பகுதியில் கட்டப்பட்டிருந்த இழையை துண்டித்தார்.
அதன்பின், தனது சைக்கிளில் ஏற்றி அவரது வீட்டில் விட்டார். உடனடியாக தனது காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார் அந்த நபர். அவரது உறுப்பிலிருந்து மீன் தூண்டிலை அகற்றிய மருத்துவர்கள் ஒரு வாரத்திற்கு நீச்சல் மட்டுமல்ல குளிக்கவே கூடாது என்று கூறிவிட்டார்களாம்.