பேஸ்புக்கில் தற்கொலை வீடியோ: தன்னை தானே துப்பாக்கியால் சுட்ட மனிதர்

சனி, 2 ஏப்ரல் 2016 (12:25 IST)
அமெரிக்காவில் ஒரு மனிதர் பேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீமிங்கில் தன்னை தானே துப்பாக்கியில் சுட்டு தற்கொலை செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
சிக்காகோவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 31 வயதான அவர் வெஸ்ட் எங்கிள்வுட் பகுதியில் நின்று கொண்டு தான் தற்கலை செய்து கொள்வதற்கு முன் கேமராவை பார்த்து பேசுகிறார், பின்னர் திடீரென தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொள்கிறார்.

 
தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் லைவ் ஸ்ட்ரீமிங்கில் வீடியோ வெளியிட வேறு யாராவது உதவியிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்