கே.எப்.சி சாப்பிடப் போறீங்களா? : இதைப் படிங்க!

வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (12:47 IST)
கே.எப்.சி யில் சாப்பிடப் போய் ஒருவர் அதிர்ச்சியான சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.


 

 
ஆஸ்திரேலியாவின் க்வீன்லேண்ட் பகுதியில் வசிப்பவர் நிக்கோலஸ்(30). இவர் ஐடி துறையில் பணிபுரிகிறார். இவர் லேப்ரடார் பகுதியில் செயல்படும் ஒரு கேஎப்சி உணவகத்திற்கு சென்று சிக்கன் விங்ஸ் மற்றும் பிரஸ்ட் எனும் உணவை சாப்பிட ஆர்டர் செய்துள்ளார்.
 
அந்த உணவு அவருக்கு கொடுக்கப்பட்டது. அவர் சாப்பிட ஆரம்பித்ததும் அதன் சுவை அவருக்கு குமட்டிக் கொண்டு வந்தது. என்னவென்று அவர் அந்த உணவை பார்க்க, அவர் அதிர்ச்சிடைந்துள்ளார். அது பார்ப்பதற்கு கோழி கறி போல் இல்லை. கோழியின் கழிவுகள் போல் இருந்தது. சர்வரிடம் அதை காட்டியுள்ளார்.
 
அவர்களோ, கோழியின் சிறுநீரகம், நுரையீரல் எதாவது க்ளீன் செய்யாமல் அதில் இருந்திருக்கும் சார்.. ஸாரி... என்று கூலாக கூறியுள்ளார்கள்.  ஆளை விட்டால் போதும்.. இனிமேல் கேஎப்சி பக்கமே வரமாட்டேன் என்று அங்கிருந்து ஓடியிருக்கிறார் நிக்கோலஸ்.
சமீபத்தில் இங்கிலாந்தில் இதேபோல் ஒரு பெண் கேஎப்சி யில் சாப்பிட சென்ற போது, கோழியின் கழிவு உள்ளே இருந்தது. 
 
கேப்சியில் இதுபோல் சாப்பிட வருபவர்களுக்கு கோழியின் கழிவுகளை தவறுதலாக வைத்து சமைத்து தருவது அதிகரித்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்