கூகுள்.காமை விலைக்கு வாங்கிய ஒரு நிமிட உரிமையாளர்

சனி, 3 அக்டோபர் 2015 (16:26 IST)
கூகுள்.காமின் டொமனை விலை கொடுத்து வாங்கி அதற்கு ஒரு நிமிடம் உரிமையளராக இருந்த ஒருவரைப் பற்றிய பரபரப்புச் செய்தி வெளிவந்திருக்கிறது.


 

 
சான்மே அஸ்வின் வேத் என்பவர் இணையதள முகவரிகளை வாங்கி விற்கும் ஆர்வம் கொண்டவர். இவர் ஒரு இந்தியர். கூகுளின் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரும் கூட.
 
இவர், விளையாட்டாக கூகுள்.காம் என்ற இணையதளத்தை வாங்குவதற்கு முயற்சி செய்திருக்கிறார். பொதுவாக ஏற்கனவே இருக்கும் ஒரு இணையதளத்தை ஒருவர் வாங்க முடியாது. அது ஏற்கனவே அது பயன்பாட்டில் இருக்கிறது என்று காட்டும்.
 
ஆனால் அவருக்கு அப்படிக் காட்ட வில்லை. மாறாக, நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று மெசேஜ் வந்ததோடு, உங்கள் கிரெடிட் கார்டு விபரங்களைக் கொடுங்கள் என்று வந்திருக்கிறது. ஆச்சர்யம் அடைந்த அவர், ஏதோ தவறாக வருகிறது என்று நினைத்து, தனது கிரெடிட் கார்ட் விபரங்களைக் கொடுத்திருக்கிறார். 
என்ன ஒரு ஆச்சர்யம். அவருடைய கிரெடிட் கார்டு கணக்கிலிருந்து 12 டாலர்களை எடுத்துக்கொண்டு. இனி கூகுள்.காம் உங்களுக்குச் சொந்தம் என்று அவருக்கு இரண்டு இமெயிலும் வந்து விட்டது. ஆனந்த அதிர்ச்சியில் அவர் திக்குமுக்காடி விட்டார். 
 
ஆனால் அடுத்த நிமிடமே அவர் வாங்கியது செல்லாது என்று கூகுளிடமிருந்து ஒரு இமெயில் வந்திருக்கிறது. ஏதோ தொழில்நுட்பக் கோளாறால் அப்படி நடந்து விட்டது என்று தெரிய வந்திருக்கிறது. இருந்தாலும் கூகுள்.காமிற்கு ஒரு நிமிடம் தான் உரிமையாளராக இருந்ததை நினைத்து சந்தோஷப்படுகிறார் அந்த இந்தியர்.

வெப்துனியாவைப் படிக்கவும்