ஹிப்போகாம்பஸ் என்னும் அறிவியல் பெயர் கொண்ட குதிரை மீன், குறிப்பாக அதன் தலைப்பகுதியில் குதிரைத் தலை போன்ற தோற்றத்தால் கடற்குதிரை என்று அழைக்கப்படுகிறது. கடற்குதிரைகள் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு பூமியில் தோன்றியவைகள் ஆகும். ஆனால் அவற்றின் ஆயுட்காலம் நான்கு ஆண்டுகள் மட்டுமே. உலகில் 33 வகையான கடற்குதிரைகள் அறியப்பட்டுள்ளன.