140 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் பல் கண்டுபிடிப்பு

வெள்ளி, 14 நவம்பர் 2014 (18:12 IST)
மலேசியாவில் சுமார் 140 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் பல் ஒன்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 
மலேசியப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரான மசடோஷி சோன்  என்பவர் இதைக் கண்டுபிடித்துள்ளார். 2012ஆம் ஆண்டு 75 மில்லியன் ஆண்டுகள் பழமையான முதல் டைனோசர் படிமம் கிடைத்த இடத்துக்கு அருகிலேயே இந்த பல்லும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பல் சுமார் 13மிமீ நீளமும், 10.5மிமீ அகலமும் கொண்டதாகும்.
 
இதுகுறித்து மசாடோஷி சோன் கூறுகையில்,  'இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் தொடர்பான குறித்து ஆய்வைத் தொடங்கினோம்' என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்