ராஜபக்‌ஷே தமிழ் வாக்காளர்களை ராணுவம் மூலம் அச்சுறுத்துகிறார் - மைத்திறி பால சிறிசேனா

வெள்ளி, 2 ஜனவரி 2015 (12:16 IST)
இலங்கையில் தமிழ் வாக்காளர்களை ராணுவம் மூலம் ராஜபக்சே அரசு அச்சுறுத்தி வருவதாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திறி பால சிறிசேனா குற்றம் சாட்டியுள்ளார்.
 
இலங்கை தலைநகர் கொழும்பில் பேசிய மைத்திறி பால சிறிசேனா ”யாழ்ப்பாணத்தில் மட்டும் தேர்தலை சீர்குலைக்க 2 ஆயிரம் ராணுவ வீரர்களை ராஜபக்சே அரசு குவித்திருத்திருக்கிறது. அதுபோல பொலன்னருவ பகுதிக்கும் வீரர்கள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். வாக்குப்பதிவை சீர்குலைக்க அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.
 
கூட்டத்தில் பேசிய முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, ’ராஜபக்சேவின் சதித் திட்டத்தை ராணுவத்திலுள்ள தங்களது ஆதரவாளர்கள் மூலம் அறிந்து கொண்டதாகவும், ராணுவ வீரர்கள் மூலம் தமிழர் பகுதிகளில் வாக்குப்பதிவை தடுப்பதே ராஜபக்சேவின் எண்ணம்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்