லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு முத்தம் மட்டும் தான் கொடுக்க முடியுமா???

சனி, 17 செப்டம்பர் 2016 (11:41 IST)
டொரோண்டோவைச் சேர்ந்த ஓவியர் ஒருவர் லிப்ஸ்டிக் மூலம் ஓவியங்களைத் தீட்டி வருகிறார்.

 
கேன்வாஸ் துணி மீது லிப்ஸ்டிக் பூசப்பட்ட உதடுகளைப் பதித்து, முழு ஓவியத்தையும் உருவாக்குகிறார். ஒவ்வொரு முறையும் அலுக்காமல் லிப்ஸ்டிக் போட்டு, முத்திரை பதிக்கிறார். 
 
‘எல்லோரும்தான் ஓவியம் தீட்டுகிறார்கள். வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்பதற்காக லிப்ஸ்டிக் ஓவியத்தைத் தேர்ந்தெடுத்தேன். அதிக பொறுமை தேவைப்படும். சில மணி நேரங்களில் இருந்து ஒரு வாரம் வரை கூட ஆகலாம். உதடுகள் வலி எடுக்கும். ஆனாலும் எல்லோரும் பாராட்டும்போது வலி மறைந்து போகும்’ என்கிறார் அந்த ஓவியர்.

வெப்துனியாவைப் படிக்கவும்