சிங்கத்தை செல்லப்பிராணியாக வளர்க்கும் இளம்பெண்

வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (15:32 IST)
தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சிங்கமொன்றை தனது வீட்டில் செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார்.
 

 
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மைக்கி வான் டெண்டர் (22) என்பவர்தான் தனது வீட்டில் சிங்கத்தை வளர்த்து வருகிறார். மேலும், அந்த சிங்கத்துடன் தனக்கு அருகில் படுத்துறங்கவும், தன்னுடன் நெருங்கி விளையாடவும் அப்பெண் அனுமதிக்கிறார்.
 

 
இந்த பெண் சிங்கத்துக்கு எலிஸா என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது அதற்கு 20 மாத வயதாகுகிறது. இச்சிங்கம் பிறந்து 5 ஆவது நாளில் அதன் தாய் கைவிட்டுச் சென்றதையடுத்து, மைக்கி வான் டொன்டர் சிங்கக்குட்டியை பராமரிக்கத் தொடங்கியுள்ளார். மேலும், இச்சிங்கத்துக்கு 8 மாத வயதானபோது, அதை சற்று வளர்ந்த இரு ஆண் சிங்கங்கள் கொண்ட கூண்டொன்றில் மைக்கி வளரவிட்டார்.
 
எனினும் மேற்படி ஆண் சிங்கங்களுடனான மோதலின்போது எலிஸாவின் கழுத்தில் காயமேற்பட்டது. அதையடுத்து, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டு, அச்சிங்கத்துக்கு பல சிகிச்சைகளையும் மைக்கி வான் டொண்டர் மேற்கொண்டுள்ளார்.
 
மிக இளம் வயதிலிருந்து இச்சிங்கத்தை தான் வளர்த்து வருவதால் அதனுடன் நெருங்கிப் பழகுவதற்கு தான் அஞ்சவில்லை வயதான மைக்கி வான் டெண்டர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்