பூமியைப் போல் 20 புதிய கிரகங்கள்: நாசா தகவல்

வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (10:14 IST)
பூமியைப் போலவே உயிர்கள் வாழ தகுதியுள்ளா 20 புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.


 

 
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா கெப்ளர் தொலைநேக்கி மூலம் பூமியைப் போல வேறு எதும் கிரகங்கள் இருக்கிறதா? என்று ஆராய்ச்சி செய்து வருகிறது.
 
விண்ணில் செலுத்தப்பட்டுள்ள கெப்ளர் தொலைநோக்கி மூலம் இதுவரை 400 புதிய கிரகங்கள் கண்டுப்பிடிக்கப்படுள்ளன. இந்த 400 கிரகங்களில் 216 கிரகங்கள் உயிர்கள் வாழ தகுதியுள்ளதாக உள்ளன, இருந்தாலும் அதில் 20 கிரகங்கள் உயிர்வாழ்வதற்கான அடிப்படையோடு மிகச்சிறந்தவையாக உள்ளது என்று ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
 
விஞ்ஞானிகள் அந்த கிரகங்களின் அளவு, பாறைகள், வாயுக்கள் போன்ற பல தண்மைகள் அடிப்படையில் ஆராய்ந்து முடிவை வெளியிட்டுள்ளனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்