சுடுகாடான பிரேசில் கடற்கரை

புதன், 14 அக்டோபர் 2015 (08:18 IST)
பிரேசிலில் 5 ஆயிரம் மாடுகளை ஏற்றி வந்த கப்பல் மூழ்கியதால் அந்நாட்டு கடற்கரை முழுவதும் இறந்த மாடுகளின் உடல்கள் ஒதுங்கியுள்ளன.


 
 
லெபனான் நாட்டில் இருந்து பிரேசில் வழியாக 5 ஆயிரம் மாடுகளை ஏற்றிக் கொண்டு ஒரு சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்தக் கப்பல் பிரேசில் கடற்பகுதிக்குள் மூழ்கியது.
 
இந்த விபத்தில் கப்பலில் இருந்த 5 ஆயிரம் மாடுகளும் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தன. இறந்த மாடுகளின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன. எங்கு பார்த்தாலும் மாடுகளின் பிணக்குவியல்கள் மட்டுமே காட்சியளிக்கின்றன.

மாடுகளின் உடல்கள் அழுக வருவதால் அப்பகுதியே துர்நாற்றத்தின் இருப்பிடமாக மாறியுள்ளது.மாடுகளின் உடல்களை அப்புறப்படுத்தும் பணியில் பிரேசில் அரசு ஈடுபட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்