நேரலை நிகழ்ச்சியில் ஷூவை கழற்றி எரிந்த வழக்கறிஞர் (வீடியோ)

புதன், 5 அக்டோபர் 2016 (11:01 IST)
எகிப்திய தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மத தலைவரை வழக்கறிஞர் ஒருவர் ஷுவால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
எகிப்து நாட்டில் ஏ டி.வி. என்ற தொலைக்காட்சியில் நேரலை விவாத நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் வழக்கறிஞர் நபிக் அல் வாஸ்க் மற்றும் மத தலைவர் இமாம் முஸ்தபா ரஷீத் கலந்துக்கொண்டனர்.
 
விவாதத்தின் போது முஸ்தபா ரஷீத், முக்காடு ஒரு கலாச்சார பாரம்பரியமாக இருந்தாலும் அது மதத்தால் திணிக்கப்படுகின்ற ஒரு கடமை என குறிப்பிட்டார்.
 
அவருடைய கருத்தால் அதிருப்தியடைந்த வழக்கறிஞர் தனது ஷூவை கழற்றி மத தலைவர் இமாம் முஸ்தபா ரஷீத் மீது தாக்குதலில் ஈடுபட்டார். உடனே தொலைகாட்சி ஊழியர்கள் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தினார்கள்.
 
அவர்களின் சண்டையில் கேமிராமேன் காயமடைந்தார். இதையடுத்து இமாம் முஸ்தபா ரஷீத் உடனே அங்கிருந்து வெளியேறினார்.
 
நன்றி: Mails' Funny

வெப்துனியாவைப் படிக்கவும்