ஆஸ்லோவின் துணை மேயராக ஈழத்தமிழ்ப் பெண் கம்சாயினி குணரட்ணம் தேர்வு

வியாழன், 22 அக்டோபர் 2015 (00:56 IST)
ஆஸ்லோவின் துணை மேயராக ஈழத் தமிழ்ப்பெண் கம்சாயினி குணரட்ணம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 

 
நார்வே நாட்டில் செப்டம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தொழிலாளர் கட்சியின் சார்பில்,  ஈழத் தமிழ்ப்பெண் கம்சாயினி குணரட்ணம் போட்டியிட்டார். இதில் அவர் அமோக வெற்றி பெற்றார்.
 
இலங்கையில் பிறந்த கம்சாயினி குணரட்னமும் சிறுவயதில் பெற்றோருடன் நார்வே நாட்டிற்கு அகதியாக சென்றார்.  தற்போது அவருக்கு வயது 27. இப்போது, தலைநர் ஒஸ்லோவின் துணை மேயராக வெற்றிகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
கடந்த 2011ஆம் ஆண்டு நார்வே தொழிலாளர் கட்சியின் சார்பில் இளைஞர் மாநாடு நடைபெற்றது. அப்போது, அந்த மாநாட்டை குறிவைத்து தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் 72 பேர் பரிதாபமாக பலியானார்கள். இதில், கம்சாயினி குணரட்னம் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்