குழந்தையுடன் ஓடிய அகதியை கால் இடறி கீழே விழ வைத்த வீடியோகிராபர்

வியாழன், 10 செப்டம்பர் 2015 (15:50 IST)
ஹங்கேரியில்  குழந்தையுடன் ஓடிச் சென்ற சிரியா அகதியை, கால் இடறச்செய்து கீழே விழச் செய்த ஒரு பெண் வீடியோகிராபர் வேலையிலிருந்து தூக்கப்பட்டார்.
 
உள்நாட்டுப் போர் காரணமாக ஐரோப்பாவில் தஞ்சமடைந்துள்ள சிரிய அகதிகளில் பலர் ஹங்கேரி நாட்டில் தங்கியுள்ளனர். அகதிகள் குறித்து செய்தி சேகரிக்க அங்கு ஏராளமான பத்திரிகை, தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருந்தனர். கணக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கும்போது ஒரு அகதி தப்பி செல்ல முயன்றார்.
 
அப்போது அவர்களை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த, உள்ளூர் தொலைக்காட்சியை சேர்ந்த பெண் வீடியோகிராபர் ஒருவர், அந்த அகதியை காலை இடறி கீழே விழ வைத்தார். இதில் அந்த அகதி குழந்தையுடன் கீழே விழுந்து காயம் அடைந்தார். மேலும் ஒரு அகதி சிறுமியையும் இதே போல் காலை இடறி கீழே விழ வைத்துள்ளார். 
 
இந்த சம்பவத்தை அங்கிருந்த மற்றொரு வீடியோகிராபர் வீடியோ எடுத்து, தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார். இதையடுது, அந்த பெண் வீடியோ கிராபர் வேலை பார்த்து வந்த தொலைக்காட்சி நிறுவனம் வரை வேலையை விட்டு நீக்கியது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்