உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரில் இணைந்துள்ள கொரிய ராணுவ வீரர்கள் அதிகமான ஆபாசப்படங்களை பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 2 ஆண்டு காலமாக போர் நடத்தி வரும் நிலையில், நேட்டோ நாடுகளின் ஆதரவுடன் உக்ரைனும் ரஷ்யாவிற்கு எதிராக போராடி வருகிறது. இதில் இரு தரப்பிலுமே ஏராளமான ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். ரஷ்யாவின் ராணுவ பலம் குறைந்த நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், தனது நாட்டு ராணுவத்தின் 10 ஆயிரம் வீரர்களை ரஷ்ய போர் களத்திற்கு அனுப்பியுள்ளார். சமீபத்தில் குர்ஸ்க் பகுதியில் வடகொரிய வீரர்கள் உக்ரைன் ராணுவத்துடன் தனது முதல் போர் தாக்குதலை தொடர்ந்தனர்.
வடகொரியாவில் இணைய வசதிக்கு கடும் கட்டுப்பாடு உள்ளது மட்டுமல்லாமல், வெளிநாட்டு படங்கள், ஆபாச படங்கள் பார்ப்பதற்கு கடும் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடகொரியாவில் இருந்து ரஷ்யா வந்த ராணுவ வீரர்களுக்கு கட்டுப்பாடில்லாத இணைய வசதி கிடைத்துள்ளதால் அவர்கள் அதிகமாக ஆபாச படங்களை பார்ப்பதாக தி பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கிம் ஜாங் அன்னின் கடும் கெடுபிடிகளுக்குள் இருந்தவர்கள் ரஷ்யாவிற்குள் வந்துள்ளதால் அந்த சுதந்திரத்தால் இப்படி செய்வதாக கூறினாலும், அதற்கான ஆதாரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
Edit by Prasanth.K