ஆச்சர்யப்படும் விலைக்கு ஏலம் போன மாவீரன் நெப்போலியன் பூட்ஸ் !
திங்கள், 2 டிசம்பர் 2019 (21:26 IST)
பிரான்ஸ் நாட்டின் சக்கரவர்த்தியாக இருந்த மாவீரன் நெப்போலியனின் பெருமை இந்த உலக வரலாற்றுப் பக்கங்களில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது காலணி ஒன்று 117000 யூரோக்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
மாவீரன் நெப்போலியன், தனது கடைசி நாட்களில் செண்டி ஹெலனா தீவில் ஆங்கிலேயர்களால் சிறை வைக்கப்பட்டபோது, அவர் அணிந்திருந்த பூட்ஸ், தற்போது பாரிஸில் நடைபெற்ற ஏலத்தில் 117000 யூரோக்களுக்கு விற்கப்பட்டுள்ளது.
இந்த ஏல நிறுவனத்தினர் இவ்வளவு விலைக்கு இது விற்பனை ஆகும் என எதிர்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.