மலேசியாவில் காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடத்தை வெளியிட்ட கர்நாடக அரசு

திங்கள், 22 ஜூன் 2015 (23:48 IST)
மலேசிய பத்திரிகைகளில், கர்நாடக அரசு வெளியிட்ட விளம்பரங்களில், இந்திய வரைபடத்தில் காஷ்மீர் மாநிலம் இல்லாமல் வெளியிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 
 

 
மலேசிய பத்திரிகைகளில், கர்நாடக அரசு ஒரு விளம்பரம் வெளியானது. அதில், இந்திய வரைபடத்தில் காஷ்மீர் மாநிலம் இல்லாமல் வெளியானது. 
 
இதற்குப் பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இது மிகப் பெரிய தவறான செயல் என்றும், இந்தத் தவறுக்கு காரணமானவர்கள் மீது கடும் நவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது குறித்து அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. 
 
இந்தக் குறித்து, கர்நாடக மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் தேஷ்பாண்டே கூறுகையில், மலேசியா உள்நாட்டு நிகழ்ச்சியை முன்னிட்டு, அந்நாட்டு ஏஜென்ட்கள் மூலம் கொடுக்கப்பட்டது. இந்த விளம்பரம் கர்நாடக அரசால் நேரடியாக வெளியிடப்பட்டது அல்ல. இந்த விளம்பரத்தை சிங்கப்பூர் சார்ந்த நிறுவனம் வெளியிட்டது என்று கருத்துத் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்