பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவச உடை அணிந்து வந்த பெண்

வெள்ளி, 6 மார்ச் 2015 (20:29 IST)
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான ஈவ் டீசிங் மற்றும் பொது இடங்களில் துன்புறுத்தல் ஆகியவை அதிகரித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு இளம் பெண் இரும்பு கவம்சம் அணிந்து பொது இடங்களில் நடமாடினார்.
ஆப்கானில்  பெண்கள் கவுரவ கொலை செய்யபடுவது, பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதும், சிறுவயது திருமணத்திற்கு வற்புறுத்தப்படுவதும் பரவலாக நடந்து வருகிறது. இந்தக் கொடுமைகளுக்கு எதிராக ஒரு பெண் இரும்பு கவசம் அணிந்து வீதிகளில் நடமாடினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. ஆண்களின்  பாலியல் துன்பறுத்தலுக்கு எதிராக அந்த இளம் பெண் இரும்பு கவச உடை அணிந்து மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் நடமாடினார்.
 
அந்த இளம் பெண்ணின் பெயர் குப்ரா காதேமி. பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் பல ஆண்கள் சுற்றி நிற்க அந்த பெண் நடந்து செல்வது போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியது. அந்த பெண் காபூல் நகரின் மேற்கு பகுதியில் உள்ள  கர்டி-3 பகுதியில்  நடமாடி உள்ளார். இந்த படங்கள் சமூக வலைதளங்களான பேஸ்புக் , டுவிட்டரில் பகிரபட்டுள்ளது.
 
முஸ்லீம் பழமை வாதம் உள்ள காபூலில் இளம்பெண்ணின்  எதிர்ப்பு போராட்டம் கலவையான ஒரு எதிர்வினையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பலர் இந்த பெண்ணின்  நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் மேற்கத்திய கலாசாரத்தை செயல்படுத்த முயற்சி செய்வதாக குற்றம்சாட்டி உள்ளனர்.
 
சிலர் துணிச்சலான தைரியமான பெண் என பாராட்டி உள்ளனர். சிலர் துருக்கியை சேர்ந்த மின்னிஜின் புரவுன் போல் தைரியமான பெண் என பாராட்டி உள்ளனர். ஆனால்  அந்த பெண்ணை சில ஆண்கள் கூட்டம் கல்லெறிந்து துரத்தி உள்ளது. மேலும் அந்த பெண்ணை தெருவில் வைத்து அவமானப்படுத்தி உள்ளது. கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
 
இது குறித்து குப்ரா காதேமி கூறியதாவது:-
 
நான் இதை தொடங்கிய பிறகு ஒரு கூட்டம் என்னை தூரத்தி என்னை கொலை செய்ய முயற்சித்தது. அவர்களிடமிருந்து நான் தப்பினேன். எனது அச்சத்தை பார்த்து ஆண்கள் இழிவாக பேசினர். சிலர் என்னை தொடரந்து வந்து அவமானபடுத்தினார்கள். சிலர் என் மீது கற்களை வீசினார்கள். நான் சிறுமியாக இருந்ததால் ஆண்கள் என்னை தொட்டு காபூல் நகர தெருக்களில் அவமானபடுத்தினார்கள். சில ஆண்கள் எனது வீட்டிற்கே வந்து கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்