பாலஸ்தீன கைக்குழந்தைக்கு பாலூட்டி உலகை கண்கலங்க வைத்த யூத பெண்

வெள்ளி, 9 ஜூன் 2017 (19:20 IST)
இஸ்ரேல் நாட்டில் பாலஸ்தீன பெண்ணின் கைக்குழந்தைக்கு யூத பெண் ஒருவர் பாலூட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
இஸ்ரேல் நாட்டில் பாலஸ்தீன குடும்பம் சென்ற கார் விபத்துக்குள்ளானது. விபத்தில் பாலஸ்தீன பெண் உயிர் தப்பினார். அவரது கணவர் சம்பவ இடத்திலே இறந்துவிட்டார். அந்த பெண்ணின் குழந்தையும் உயிர் பிழைந்த்து.
 
விபத்தில் கயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். அவரின் குழந்தை மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் உலா என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தை பசியில் அழத் தொடங்கியுள்ளது. உலா குழந்தைக்கு புட்டிப் பால் கொடுத்துள்ளார். குழந்தை குடிக்க மறுத்துள்ளது.
 
பாலஸ்தீன பெண் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால், உலா அந்த குழந்தைக்கு பாலூட்டியுள்ளார். உலா ஒரு யூத பெண். இஸ்ரேல் யூத இனத்தவரான உலா, பாலஸ்தீன குழந்தைக்கு பாலூட்டிய சம்பவம் உலக மக்கள் கண்கலங்க வைத்துள்ளது. 
 
மேலும் சமூக வலைதளங்களில் உலா என்ற பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்