அதிரடி ஜேம்ஸ் பாண்ட்-இன் மனிதாபிமான பேச்சு

திங்கள், 23 மே 2016 (23:10 IST)
உலக மனிதநேய மாநாட்டில் ஜேம்ஸ் பாண்ட் கண்ணிவெடிகளுக்கு ஏதிராக பேசியுள்ளார்.


 

 
உலக மனிதநேய மாநாடு இஸ்தான்புல் நாட்டில் நடந்தது. இந்த மாநாடு உடைந்து போன மனிதநேயத்தை சரி செய்வதற்காக உருவாக்கிய ஒன்று. இதில் 150 நாடுகள் பங்கேற்றன. 
 
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர், இடம் பெயர்ந்த பொதுமக்களின் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. இரான் நாட்டில் போர், இலங்கையில் போர், வளரும் நாடுகளில் குழந்தை தொழிலாளர்கள் என எல்லா இடங்களிலும் பொருளாதாரம் அடிப்படையில் மனிதநேயம் அடிப்படுகிறது.
 
இந்நிலையில் உலக மனிதநேய மாநாடு முதன்முதலாக இஸ்தான்புல் நாட்டில் 150 நாடுகள் கொண்ட அமர்வு நடைப் பெற்று வருகிறது. மாநாட்டில், அதிரடியாக சாகசம் செய்யக் கூடிய ஜேம்ஸ் பாண்ட் நாயகன் டேனியல் கிரைக் கண்ணிவெடிகளுக்கு ஏதிராக பேசினார். 
 
கண்ணிவெடிகள் குறித்து அவர் பேசியதாவது:-
 
வருடத்திற்கு 15-20 ஆயிரம் மக்கள் தங்கள் உயிரை இழக்கின்றனர். அதில் சிறுவர்களும், பெண்களும், வயதானவர்களும் தான் அதிகம். ஏராளமாக காயமடைந்தோர், பார்வை இழந்தோர், என பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணக்கில் இல்லை, என்றார்.
   
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்