87 வயது பாட்டி கற்பழிப்பு: 15 வயது பள்ளி சிறுவர்களுக்கு 30 ஆண்டுகள் சிறை

வியாழன், 12 மார்ச் 2015 (12:14 IST)
அமெரிக்காவில் 87 வயது பாட்டியை கற்பழித்த 15 வயதுடைய இரண்டு சிறுவர்களுக்கு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
 
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தை ஒட்டியுள்ள பகுதியிலுள்ள ஒரு முதியோர் காப்பகத்துக்குள் புகுந்த, ரூபன் மெலன்சன் (15), ரேமண்ட் மிரிண்டா (14) என்ற இரு பள்ளி மாணவர்கள் அங்கு தூங்கிக் கொண்டிருந்த 87 வயது பாட்டியை முரட்டுத்தனமாக கற்பழித்தனர்.
 
பாட்டியை கற்பழித்த மாணவன்
மேலும், அங்கிருந்த 2 பாட்டில் பிளீச்சிங் பவுடர் கலந்த கரைசலை  வாயில் ஊற்றி அவரை கொல்ல முயற்சித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அந்தப் பாட்டி அறைக்குள் இருந்த அபாய அறிவிப்பு பொத்தானை அழுத்தியதால் காவலாளிகள் அவரை உடனடியாக காப்பாற்றினர்.
 
பாட்டி ரூபன் மெலன்சன், ரேமண்ட் மிரிண்டா இருவர் மீதும் இரண்டாண்டுக்கு முன்னர், அந்த பாட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி குற்றவாளிகள் இருவருக்கும் 30 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
 
18 வயது நிறைவடையும் வரை சிறார்கள் காப்பகத்திலும், 18 வயதுக்கு பின்னர் இதர கைதிகளுக்கான சராசரி சிறையிலும் இந்த 30 ஆண்டு தண்டனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.
 

நீதிமன்றத்தில் மாணவர்கள் இருவரும்
நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்ட சமயத்தில் நீதிமன்றத்தில் உள்ளிருந்த அந்த பாட்டி, ‘நீங்கள் எனது முகத்தை ஒரு முறை பார்த்து நினைவு படுத்திப் பாருங்கள். ஏனென்றால், எனது அபார்ட்மென்டில் ஏப்ரலில் நுழைந்தபோது என் மீது தாக்குதல் நடத்தி எனது சுதந்திரத்தை பறித்தீர்கள். நீங்கள் தீமையான செயலை செய்தீர்கள்” என்று கூறினார்.
 
இது குறித்து ரேமண்ட் மிரிண்டா கூறுகையில், “நான் உங்களது இல்லத்திற்குள் நுழைந்ததற்கு மன்னிக்க வேண்டும். நான், நீங்கள் என்னை மன்னிப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை” என்று கூறினான்.

வெப்துனியாவைப் படிக்கவும்