அமெரிக்காவில் ராக் ஸ்டாருடன் இரவை கழித்த ஐஸ்வர்யா தனுஷ்....

செவ்வாய், 14 மார்ச் 2017 (10:24 IST)
நடிகர் ரஜினிகாந்தின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். 


 

 
சமீபத்தில், ஐ.நா.சபையில் நடைபெற்ற விழாவில், அவர் ஆடிய நடனம் பெரும் சர்ச்சைக்கும், கிண்டலுக்கும் ஆளானது. அவர் ஆடியது பரதமே இல்லை என பல பரத நாட்டிய கலைஞர்கள் கூறினர். என் நடனத்தை விமர்சனம் செய்ய யாருக்கும் தகுதி இல்லை என ஐஸ்வர்யா தனுஷ் கருத்து தெரிவித்தார்.
 
இந்நிலையில், அவர் இன்னும் அமெரிக்காவில் இருக்கிறார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். அவரை சென்று ஐஸ்வர்யா தனுஷ் சந்தித்து பேசினார்.


 

 
இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் “ராக் ஸ்டாரும், நமது பெருமையுமான பிரியங்கா சோப்ராவுடன் இரவை கழித்தேன். உங்களை நேசிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
 
இதற்கு பதில் டிவிட்டியுள்ள பிரியங்கா “உங்களை சந்திப்பை நேசிக்கிறேன்” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்