பணியிடத்தில் காம வேட்டையாட துடித்தவனை அம்பலப்படுத்திய செய்தி வாசிப்பாளர்

வியாழன், 11 பிப்ரவரி 2016 (13:38 IST)
ஈரான் அரசு நடத்தும் ஆங்கில செய்தி நிறுவனமான ப்ரெஸ் டிவி-யின் முன்னாள் செய்திவாசிப்பாளர் ஷீனா ஷிரானி தான்னை பணியிடத்தில் வேட்டையாட துடித்த சகபணியாளரின் தொந்தரவை அம்பலபடுத்தியுள்ளார்.


 
 
கடந்த 2007 முதல் அங்கு பணிபுரிந்து வந்த ஷீனா ஷிரானி கடந்த 2-ஆம் தேதி தான இந்த வேலையை விடுவதாகவும், அதற்கான காரணத்தையும் கூறி ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
 
அவரது பதிவில், நான் இன்னமும் இந்த நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்ய விரும்பவில்லை, காரணம் இது எனக்கு நம்பிக்கை உரியதாக இல்லை. இன்று முதல் நான் ப்ரெஸ் டிவியில் இல்லை என கூறிய அவர், சிறிது நேரத்திற்கு பிறகு, தனக்கும் தான் வேலை பார்த்த அந்த டிவி சேனலின் எடிட்டர் ஹமிட் ரெஸா எமாடி இடையே நடந்த போன் உரையாடலை விவரித்து பதிவிட்டார்.


 
 
அந்த பதிவில் மிகவும் அறுவருக்கத்தக்க உரையாடல்கள் மற்றும் உள்ளுறுப்புகள் குறித்து வர்ணணையும் இடம்பெற்றிருந்தது. ஷினா ஷிரானி அவரது கோரிக்கைகளை நிராகரிக்க, அவர் விடுவதாக இல்லை மீண்டும் மீண்டும் ஷினாவை அதற்காக வற்புறுத்தினார்.
 
மேலும் ஷினா எமாடியுடன் நடந்த உரையாடலை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவிட்டிருந்தார். ஷினாவின் இந்த குற்றச்சாட்டை எமாடி முற்றிலுமாக மறுத்துள்ளார். அவை அனைத்தும் போலியானது மற்றும் இதை சர்வதேச காவல் துறை விசாரணை செய்யவேண்டும் என்றார் அவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்