இதன்படி, ஈரானிய ராணுவத்தின் அனைத்து பிரிவுகளும் துப்பாக்கி சூட்டை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், இது போரின் முடிவு அல்ல என்றும், ஈரான் ராணுவம் எப்போதும் தயார் நிலையில் இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தற்போது ஈரான் முன்வைத்துள்ள 10 அம்சத் திட்டத்தில் , ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் ஆதிக்கத்தை அங்கீகரிப்பது, பிராந்தியத்திலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவது, ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்குவது மற்றும் போரினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குவது போன்ற கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.