அணு உலை ரகசியத்தை வெளியிட்ட விஞ்ஞானிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2016 (16:24 IST)
ஈரான் நாட்டின் அணு உலை ரகசியத்தை தெரிந்து வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட அந்நாட்டு பிரபல விஞ்ஞானி ஷாராம் அம்ரிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.


 

 
அந்த நாட்டில் உள்ள மேம்பாட்டு ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றிவந்த ஷாராம் அம்ரி என்பவர் மீது 2010ஆம் ஆண்டு தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பின் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்
 
அவர் ஈரானில் உள்ள அணு உலைகள் மற்றும் அணு ஆயுத ரகசியங்களை திருடி அமெரிக்காவிற்கு கொடுத்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. நீதிமன்றத்தில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில், அவர் ஈரான் நாட்டு சிறையில் தூக்கிலிடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவரினுடல் அவரின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்