ஈரானை பாராட்டிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்

செவ்வாய், 29 டிசம்பர் 2015 (20:33 IST)
அணுசக்தி தொடர்பான விசயங்களை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை ஈரான் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி பாராட்டியுள்ளார்.

 
நேற்று குறைந்த அளவில் செறிவூட்டப்பட்ட 11 டன் யூரேனியதை ஈரான் ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, ஈரானின் நடவடிக்கை நம்பிக்கை அளிக்கும் வகையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். 
 
சர்வதேச நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டில் குறிப்பிடப்பட்ட விசயங்களை நிறைவேற்ற ஈரான் எடுத்துவரும் முயற்சிகளை அவர் பாராட்டியுள்ளார்.
 
கடந்த ஜூலை மாதத்தில் வல்லரசு நாடுகளுடன் செய்து கொண்ட உடன்பாட்டில், தன்னிடம் உள்ள குறைந்த அளவு செறிவூட்டப்பட்ட யூரேனியத்தின் அளவைக் குறைக்கவும், யூரேனியத்தைச் செறிவூட்டும் அமைப்புகளை குறைக்கவும் ஈரான் ஒப்புக்கொண்டிருந்தது என்பதை சுட்டிக்காட்டினார்.

2015 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் ஓர் கண்ணோட்டம்

வெப்துனியாவைப் படிக்கவும்