இந்தியப் பெண்களின் விலை ரூ.4 லட்சம்

வெள்ளி, 27 மே 2016 (15:14 IST)
இந்தியப் பெண்கள் ரூ.4 லட்சம் வரை துபாயில் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
 

 
இந்தியாவில் வீட்டுவேலை செய்யும் பணிப்பெண்களுக்கு சம்பளம் மிகவும் என்றும், துபாய் சென்றால் அங்கு அவர்களுக்கு மிகவும் சம்பளம் அதிகம் என்றும் சில இடைத்தரகர்கள் ஆசைவார்த்தை கூறி அழைத்துச் செல்லும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
 
வீட்டு வேலை செய்யும் பெண்கள் ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலிருந்து துபாய் நாட்டிற்கு ஏஜென்ட்கள் மூலம் அனுப்பப்படுகின்றனர். அங்கு அந்த பெண்களை இடைத்தரகர்கள் மனச்சாட்சி இன்றி பெரும் பணக்காரர்களுக்கு ரூ. 1 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை விற்பனை செய்துவிடுகின்றனர். அவர்கள் அந்த பெண்களை காலம் நேரம் இன்றி வேலை வாங்குவதும், மற்றும் தங்களது பாலியல் இச்சைக்கும் பயன்படுத்திவருகின்றனர்.
 
இப்படி விற்கப்பட்ட பல பெண்கள் விசா காலம் முடிந்தும் சொந்தநாடு திரும்ப முடியாமல் அவஸ்தைப்பட்டு  வருகின்றார்களாம். இவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஆந்திர அரசிடம் உதவி கேட்டு கதறி அழுதுபுளம்பி வருகின்றனர்.
 
இதனையடுத்து, இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை கோரி, ஆந்திர அமைச்சர் பல்ல ரகுநாத ரெட்டி, மத்திய அரசுக்கு பரபரப்பு கடிதம் எழுதினார்.
 
இந்தியப் பெண்களை காப்பாற்றிய தவறிய துபாய் அரசுக்கு இந்தியா பல்வேறு நாடுகளில் உள்ள பெண்கள் அமைப்பும், மனித உரிமை அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
 
மேலும், பாதிக்கப்பட்ட பெண்களை உடனே காப்பாற்ற வேண்டும் என குரல் வலுத்துவருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்