அமெரிக்க பல்கலைக்கழகத்தில் இருந்து 25 இந்திய மாணவர்கள் வெளியேற்றம்

செவ்வாய், 7 ஜூன் 2016 (20:59 IST)
அமெரிக்கா மேற்கு கெண்டக்கி பல்கலைக்கழகத்தில் இருந்து 25 இந்திய மாணவர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளனர்.


 

 
அமெரிக்கா நாட்டின் மேற்கு கெண்டக்கி பலகலைக்கழகத்தில் இந்திய மாணவர்கள் 60 பேர் கடந்த ஜனவரி மாதம் கம்ப்யூட்டர் அறிவியல் பட்டப்படிப்பில் சேர்ந்தனர். 
 
முதல் பருவத் தேர்வு முடிவில் 25 மாணவர்கள் தேர்ச்சி பெறும் தரத்தை அடையாத  காரணத்தினால் பலகலைக்கழகத்தில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.
 
இதனால் அந்த 25 மாணவர்களும் நாடு திரும்ப வேண்டும் இல்லையெனில் மற்றொரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயில வேண்டும். இப்படிபட்ட நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக அந்த பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர் சங்க தலைவர் ஆதித்யா சர்மா வருத்தம் தெரிவித்துள்ளார். 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்