ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் மீது தலீபான் திடீர் தாக்குதல்: மோடி கடும் கண்டனம்

செவ்வாய், 23 ஜூன் 2015 (02:24 IST)
ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் மீது தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் கூறியுள்ளதாவது:-
 
ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கோழைத்தனமான செயலாகும். ஜனநாயகத்தில் இது போன்ற தாக்குதலுக்கு மன்னிப்பே கிடையாது என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
மேலும், இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் பூரணக் குணமடைய இறைவனைப் பிரார்த்தனை செய்வதாகவும், இந்த நேரத்தில் ஆப்கானிஸ்தான் மக்களின் நண்பனாகத் துணை நிற்பதாகவும் கூறியுள்ளார். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்