மாஞ்ஜரா அங்கு ஒரு கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அதில் வந்த வருமானத்தை வைத்து சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள பீட்டர் மரிட்ஷ் பர்க் என்ற பகுதியில் வீடு வாங்கியுள்ளார். இந்த நிலையில் மாஞ்ஜராவின் குடும்பத்தினர் அனைவரும் அந்த வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர் யாரோ அவர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.
இதனால் மாஞ்ஜரா மற்றும் அவரது மனைவி, மேலும், அவரது 3 குழந்தைகள் உட்பட மொத்தம் 5 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.