இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.யின் தந்தைக்கு 366 நாள் சிறை

சனி, 20 ஆகஸ்ட் 2016 (20:13 IST)
இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க எம்.பி.யின் தந்தைக்கு போலியான முறையில் தேர்தல் நிதி கணக்கு காட்டியதற்காக 366 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 

 
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட டாக்டர் அமி பெரா கடந்த 2014ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகளுக்கான தேர்தலில் போட்டியிட்டு வென்றார். அவர் மீண்டும் ஒருமுறை போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். மூன்றாவது முறையாகவும் இதே தொகுதியில் போட்டியிட முயன்று வருகிறார்.
 
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலின் போது 2010 -2012 ஆண்டுகளுக்கு இடையில் 130 நபர்களின் பெயரால் தேர்தல் நிதி பெற்றது போல் போலியாக பணப் பரிமாற்றம் செய்ததாக அவரது தந்தை பாபுலால் மீது குற்றம்சாட்டப்பட்டது.
 
இதன்மூலம் 2 லட்சத்து 60 ஆயிரம் டாலர்கள் அளவுக்கு முறைகேடான பணப் பரிமாற்றம் செய்து அமெரிக்காவின் தேர்தல் சட்டவிதிகளை மீறிய குற்றத்திற்காக இவர் மீது கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
 
இவ்வழக்கு விசாரணையின் போது பாபுலால் குற்றத்தை ஒப்புக் கொண்டர். இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி டிராய் நுன்லே, பாபுலால் பெரவுக்கு 366 நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்