உலக மக்கள் தொகை; சீனாவை முந்தி முதலிடம் பிடிக்கும் இந்தியா ??

வியாழன், 29 ஏப்ரல் 2021 (00:09 IST)
அடுத்த ஆண்டு இந்தியாதான் உலக மக்கள் தொகையில் முதலிடம் பிடிக்கும் எனத் தகவல் வெளியாகிறது.

தற்போது உலக அளவில் மக்கள் தொகையில் நமது அண்டை நாடான சீனா முதலிடத்தில் உள்ளது. அங்கு உலகமக்கள் தொகையில் சுமார் 18% மக்கள் உள்ளனர். இதற்கடுத்த படியான இந்தியா உள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு 2022 ஆம் ஆண்டு சீனாவை முந்தி இந்தியா மக்கள் தொகையில் முதலிடம் பிடிக்கும் எனக் கூறப்படுகிறது.

குறிப்பாக 2022 ஆம் ஆண்டில் சீனாவில் புதிதாய்ப்  பிறக்கும் குழந்தைகளை விட  இறப்பு விகிதம் அதிகமாகும் எனவும் அதனால் மக்கள் குறைய வாய்ப்புள்ளதாகவும் ஒரு ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தற்போது 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா முதலிடத்திற்கு வரும் எனக் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்