பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த தாலிபானுக்கு இந்தியாவும் உதவியுள்ளது - முஷரப் பகீர் குற்றச்சாட்டு

வியாழன், 18 டிசம்பர் 2014 (16:38 IST)
பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த தாலிபானுக்கு இந்தியாவும் உதவியுள்ளது என்று பாகிஸ்தான் முன்னாள் பர்வேஷ் முஷரப் குற்றம் சாட்டியுள்ளார்.
 
பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் ராணுவ பள்ளியில் புகுந்து, தலைமையாசிரியர் மற்றும் பள்ளில் குழந்தைகள் மீது தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 133 குழந்தைகள் உட்பட 151 பேர் பலியாகினர்.

 
இதற்கு பல நாடுகளின் தலைவர்களும் கண்டனத்தையும், இறந்தவர்களுக்கு இரங்களையும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த பர்வேஷ் முஷரப் தலீபான் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் நடத்த இந்தியா உதவியுள்ளதாக குற்றம் சாட்டினார்.
 
இது குறித்து பர்வேஷ் முஷரப் கூறுகையில், “ உங்களுக்கு மவுலாமா பஷலுல்லா யார் என்பது தெரியுமா? அவர் தெஹ்ரீக்-ஈ- தலீபானின் கமாண்டர். அவர் ஆப்கானிஸ்தானில் உள்ளார். 
 
பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதலை நடத்துவதற்காக  ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் ஹமீது ஹர்சாயும், ”ரா” அமைப்பும் அவருக்கு உதவி செய்துள்ளது. தலிபான் கமாண்டருக்கு இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்துவதற்காக உதவி அளித்துள்ளது.” என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்