கொரோனா வைரஸ் பரவலை குறைக்க கைகுலுக்கலுக்கு பதில்... புதுமையான முறை... வைரல் வீடியோ !

Webdunia
புதன், 4 மார்ச் 2020 (19:43 IST)
வைரஸ் பரவலை குறைக்க கைகுலுக்கலுக்கு பதில்... புதுமையான முறை... வைரல் வீடியோ !

சீனா தேசத்திலுள்ள வூபே மாகாணத்தில்  கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதலாய் அந்நாட்டில் பல்வேறு மாகாணங்களில் பரவிய இந்த உயிர் கொல்லி வைரஸ் உலகில் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இதுவரை உலகெங்கிலும் மொத்தம் 3000 க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
 
சீனா தேசத்த அடுத்து, அருகே உள்ள தென்கொரியாவிலும் இந்த நோய் வேகமாக பரவி வருகிறது. இத்தாலியாவில் இந்த நோய் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இரானில் 66 ஆக பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
 
அத்துடன் உலக அளவில் 90,000 க்கும் அதிகமானவர்கள் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்தியாவிலும் இந்த உயிர்க் கொல்லி நோய் தாக்கக்கூடும் என பலரும் அச்சம் கொண்டிருந்த நிலையில், பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படதேவையில்லை; பல்வேறு துறை அமைச்சகங்கள் ஒன்றிணைந்து செயல்படுகிறது என அதிகாரிகளுடனான அவச ஆலோசனைக்கு பிறகு நேற்று பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
இந்தியாவில் 28 பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருப்பதாக தகவல் வெளியாகிறது. இதில், 3 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதைக் கண்டுபிடிப்பது கடும் சவாலாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகள், விமானம்,  கப்பல்   போகுவரத்தில் பரவி வருகிறது. இதனால்  பயணம் மேற்கொள்ளவிருந்த 75% பேர் பயணத்தை ரத்து செய்து விட்டனர். வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு பலத்த சோதனை நடத்தப்படுகிறது.  
 
இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ், தாக்குதல் இனிமேல் பரவக்கூடாது என்பதற்காக, சீன மக்கள் முன்னெச்சரிக்கையாக ஒருவரைப் பார்த்ததும் கைக்குலுக்குவதற்குப் பதிலாக இரு கால்களால் மாறி மாறி கால் குலுக்கிக் கொள்ளும் வீடியோ தற்போது இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் வைரல் ஆகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்