’வாக்களிக்கும் உரிமையை கொடுத்ததால் என்னை தோற்கடித்தனர்’ - மகிந்த ராஜபக்‌சே

வெள்ளி, 20 பிப்ரவரி 2015 (15:14 IST)
வாக்களிக்கும் உரிமையை கொடுத்ததால் எனக்கு எதிராக வடகிழக்கு மக்கள் வாக்களித்து என்னைத் தோற்கடித்தனர் என்று இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்‌சே கூறியுள்ளார்.
 
கடந்த ஜனவரி மாதம் 8ஆம் தேதி இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மகிந்த ராஜபக்‌சேவும், மைத்ரிபால சிறிசேனாவும் போட்டியிட்டனர். இதில், மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்‌சேவை 3 லட்சத்து 24 ஆயிரத்து 063 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
 
இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள மகிந்த ராஜபக்‌சே, “நாட்டில் முப்பது வருடங்களாக நிலவி வந்த கொடிய யுத்தத்தை முடித்து, நாட்டை ஐக்கியப்படுத்தி, இனங்களுக்கு இடையே ஐக்கியத்தை ஏற்படுத்தியதால்தான் எனக்கு எதிராக மக்கள் வாக்களித்து என்னை தோற்கடித்துள்ளனர்.
 
வடகிழக்கு மக்களுக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை நானே பெற்றுக் கொடுத்தேன். இங்கு வாக்களிக்கும் சூழலை ஏற்படுத்தி தராதிருந்தால் நானே வெற்றி பெற்றிருப்பேன்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்