சமீபத்தில், சவுதி அரேபியாவில் ஒரு ஜோடிக்கு திருமணம் நடந்தது. திருமண நிகழ்ச்சி முடிந்து, புதுமண தம்பதி ஓட்டலுக்கு வந்துள்ளனர். அறைக்கு வந்தவுடன் மணமகள் தன்னுடைய செல்போனில் மூழ்கினார்.
அவருடன் பேச விரும்புவதாக மணமகன் கூறியுள்ளார். ஆனால் மணப்பெண் அதை கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து மணமகன் கேட்டதற்கு, தன்னுடைய திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்த தோழிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
திருமணமான சில நிமிடங்களிலேயே மணமகன், மனைவியை விவாகரத்து செய்தால், திருமண விழாவிற்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.