பூனையைவிட சிறிய அளிவில் உடலைமைப்பை பெற்ற குதிரை!!

சனி, 1 ஜூலை 2017 (10:47 IST)
உடலைமைப்பில் பூனையை விட மிகச் சிறியதாக பிறந்த குதிரை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 


 
 
ரஷ்யாவில் ஒரு கிராமத்தில் குதிரை ஒன்று பிறந்தது. அந்த குதிரை பார்ப்பதற்கு அளவில் மிகச் சிறியதாக பிறந்தது. இதனால் அந்த குதிரயை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
 
குதிரையின் உரிமையாளர் கூறியதாவது இந்த குதிரை சிறிய ரகத்தை சேர்ந்தது அதனால் இது இந்த உடலைமைப்பை தான் பெற்றிருக்கும் என தெரிவித்தார். 
 
இந்த குதிரைக்கு குலிவர் என்று பெயரிட்டுள்ளது. குதிரையின் உயரம் பூனையை விட மிகச் சிறியதாக இருப்பதாகவும் கூறினார்.
 
இந்த குதிரை பிறந்த போது 31 செ.மீ உயரம் என்றிருந்த நிலையில், அதிகபட்சம் 55 செ.மீ மட்டுமே வளரும் என்று தெரிகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்