ராஜபக்‌ஷே மீதான கறுப்புப் பண பதுக்கல் விவகாரம் - உலக வங்கியை நாடுகிறது புதிய அரசு

வெள்ளி, 23 ஜனவரி 2015 (15:49 IST)
இலங்கையில் முன்னாள் அதிபர் ராஜபக்ச வெளிநாடுகளில் குவித்து வைத்துள்ள கறுப்புப் பணத்தை கண்டறிய உலக வங்கியை உதவியை இலங்கையின் புதிய அரசு நாட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
 

 
பங்குச்சந்தை, சொத்து பரிமாற்றம் ஆகியவற்றிலும் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளன. இதனால் ராஜபக்க்ஷே ஆட்சியில் நடைபெற்ற நிதி முறைகேடு மற்றும் ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்க புதிய அமைச்சரவைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் ராஜித் சேனரத்னா, “கடந்த 10 ஆண்டுகளில் வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட கறுப்புப் பணத்தை கண்டறிய இந்திய ரிசர்வ் வங்கி மட்டுமின்றி சர்வதேச நிதி அமைப்பு மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் உதவியையும் நாட உள்ளோம்.
 
மேலும், ராஜபக்ச அரசில் முக்கிய பதவிகளை வகித்த 2 பேருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் இந்தக் குழு விரைவில் விசாரணை நடத்தும் என்றும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்