அப்போ இது ஹிட்லரின் பதுங்கு குழி.. இனிமே இது ஹோட்டல்

Arun Prasath

செவ்வாய், 22 அக்டோபர் 2019 (12:22 IST)
இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரால் கட்டப்பட்ட பதுங்கி குழியை சொகுசு ஹோட்டலாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப்போரின் போது எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக ஹிட்லர் தலைமையிலான நாஜி படையினர், ஜெர்மனியிலுள்ள ஹம்பர்க் என்னும் நகரில் பதுங்கி குழி ஒன்றை உருவாக்கினர். செயிண்ட் பாலி என்று அழைக்கப்படும் இந்த பதுங்கி குழு மிகவும் பிரம்மாண்டமாக கட்டுப்பட்டதாகும்.

இதில் கிட்டதட்ட 18,000 பேர், தங்குவதற்காக கட்டப்பட்டதாகும். இந்நிலையில் என்.எச். என்ற ஹோட்டல் குழுமம் இந்த பதுங்கு குழியை சொகுசு ஹோட்டலாக வடிவமைக்க உள்ளது. அதாவது 5 அடுக்கு மாடிகள், 138 அறைகள் கொண்ட பிரம்மாண்ட ஹோட்டலாக மாற்றவுள்ளது.

இதற்கான பணிகள் ஆரம்பித்த நிலையில், 2021 ஆம் ஆண்டிற்குள் இந்த ஹோட்டலின் திறப்ப்ய் விழா நடத்த அக்குழுமம் முடிவு செய்துள்ளது. 1942 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த பதுங்கு குழி, 1945 ஆம் ஆண்டு நாஜிக்கள் தோற்கடிக்கப்பட்ட பின்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதனை இடிப்பதற்கு அதிக வெடி பொருட்கள் தேவைப்பட்டதால் இந்த பதுங்கு குழி தொலைக்காட்சி நிலையமாகவும், வணிக வளாகமாகவும் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது 5 மாடி சொகுசு ஹோட்டலாக உருவெடுக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்