சீனாவில் 111 மாடி கட்டிடத்தில் உலகிலேயே அதிவேக லிப்ட்

செவ்வாய், 22 ஏப்ரல் 2014 (13:15 IST)
சீனாவின் குவாங்ஷு நகரில் 111 அடுக்குமாடியுடன் கூடிய நிதிநிறுவன மையம் கட்டப்பட்டு வருகிறது, அதில் உலகிலேயே அதிவேகமாக செயல்படக்கூடிய லிப்ட் பொருத்தப்படவுள்ளது.
 
530 மீட்டர் உயரம் கொண்ட இரட்டை அடுக்குமாடி கட்டிடத்தில் தற்போது லிப்ட் பொருத்தப்பட்டு வருகிறது. இதை ஜப்பான் நாட்டின் ஹிட்டாச்சி நிறுவனம் தயாரித்துள்ளது.
 
இந்த லிபட் 43 வினாடிகளில் 95 மாடிகளை கடக்கும் திறன் படைத்தது. இதுபோன்ற 2 லிப்டுகள் இங்கு பொருத்தப்படுகின்றன. இது 
சக்திவாய்ந்த, காந்தசக்தி என்ஜின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த லிப்ட் உலகிலேயே அதிவேகமாக இயங்கும் திறன் கொண்டது என்ற பெருமையை பெறுகிறது.
 
60 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ள, இந்த கட்டிடத்தின் திறப்புவிழா 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்