தோல்விக்கு காரணம்: போட்டுடைத்த ஹிலாரி!!

ஞாயிறு, 13 நவம்பர் 2016 (11:36 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் பெற்றி பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹிலாரி அதிர்ச்சி தோல்வியை தழுவினார். 


 
 
அமெரிக்காவின் 45வது அதிபராக டெனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். எலக்டோரல் உறுப்பினர்களின் மொத்த வாக்குகள் 538 ஆகும். இதில் 270 வாக்குகள் பெற்றால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். 
 
இதில் டிரம்ப் 276 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். ஹிலாரி கிளிண்டன் 218 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்தார்.
 
இந்நிலையில், தோல்வி அதிர்ச்சியில் இருந்த மீளாத ஹிலாரி தன் தோல்விக்கு காரணம் எஃப்.பி.ஐ இயக்குனர் ஜேம்ஸ் கோமேதான் என்று கூறியுள்ளார். 
 
இ-மெயில் பரிமாற்றம் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிப்பதாக எஃப்.பி.ஐ இயக்குனர் ஜேம்ஸ் கோமே நாடாளுமன்றத்துக்கு எழுதியே கடிதமே, தேர்தலில் எனக்கு பின்னடைவை ஏற்படுத்தியது என்று ஹிலாரி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்