தோல்வியில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் ஹிலாரி: உருக்கமான பேச்சு!
வியாழன், 17 நவம்பர் 2016 (14:57 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பிடம் தோல்வியடைந்தார்.
ஊடகங்கள் அனைத்தும் ஹிலாரியே வெற்றி பெறுவார் என கூறி வந்தது. கருத்துக்கணிப்புகளும் அதையே கூறின. ஆனால் முடிவு அனைத்தையும் தலைகீழாக மாற்றியது. ஹிலாரியின் தோல்வியை சர்வதேச ஊடகங்கள் அதிர்ச்சியுடன் பதிவு செய்தது.
தேர்தல் தோல்வியால் மிகவும் துவண்டு போன ஹிலாரி இரண்டாவது முறையாக மக்கள் முன் உருக்கமாக பேசினார். வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்சி ஒன்றில் பேசிய ஹிலாரி, நான் இந்த விழாவுக்கு எளிதாக வரவில்லை. மிகவும் கனத்த மனதுடன் வந்துள்ளேன்.
தேர்தல் தோல்வியால் நான் மிகவும் பாதிப்படைந்துள்ளேன். உங்களில் பலரும் இந்த தோல்வியால் துவண்டு போய் உள்ளீர்கள் என்பது எனக்கு தெரியும். இந்த தேர்தல் எனக்கு ஒரு பாடத்தை கற்றுத்தரும் நிகழ்வாக அமைந்தது. அமெரிக்கர்களின் மனதை புரிந்துகொண்டேன் என்றார்.
மேலும் வல்லரசு நாடான அமெரிக்கா மரியாதையான நாடு அதன் மதிப்பை உயர்த்த ஆட்சியாளர்களுடன் சேர்ந்து உழைக்க வேண்டும் எனவும் கூறினார் ஹிலாரி கிளிண்டன்.