நேபாள் நாட்டில் மனாங் மாவட்டத்தில் இமயமலை பகுதியில் திலிச்சோ என்ற ஏரி உள்ளது. இது தான் உலகிலேயே மிக உயரமான இடத்தில் உள்ள ஏரியாகும்.
இந்த ஏரி 4 கி.மீ. நீளம், 1.2 கி.மீ. அகலம் கொண்டது. சுமார் 200 மீட்டர் ஆழம் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 4919 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையேறும் குழுவினரால், சிங்கர்கர்கா பகுதியில் கஜின் சாரா என்னும் ஏரி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஏரி கடல்மட்டத்தில் இருந்து சுமார் 5200 மீட்டர் உயரத்தில் உள்ளதாக அறியப்படுகிறது.
இந்த ஏரி சுமார் 1.5 கிமீ நீளம், 600 மீட்டர் அகலம் கொண்டுள்ளது. இந்த ஏரி கடல்மட்டத்தில் இருந்து 5200 மீட்டர் உயரத்தில் இருப்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஒரு வேளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் இது தான் உலகிலேயே மிக உயரமான இடத்தில் உள்ல ஏரி என்ற புதிய சாதனையை படைக்கும்.