நிர்வாண ‘செல்ஃபி’ படங்களை பரிமாறிக் கொண்ட பள்ளி ஜோடிகள் கைது

புதன், 23 செப்டம்பர் 2015 (15:55 IST)
தமது நிர்வாண செல்லி படங்களை தொலைபேசி மூலம் பறிமாறிக் கொண்ட காதல் ஜோடியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 
அமெரிக்கா, கலிபோர்னியாவில் உள்ள உயர்நிலை பள்ளி பாலியல் பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக கிடைத்த குற்றச்சாட்டை அடுத்து அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் அங்கு உள்ள பள்ளிகளில் திடீர் சோதனை நடத்தினர். 
 
அப்போது மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது 2 மாணவர்களின் கைப்பேசிகளில் ஆபாச படங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கார்மேகா சியோன் கேப்பன்னிங் (17) என்ற மாணவர் தன்னை நிர்வாணமாக பல்வேறு கோணங்களில் செல்ஃபி படம் எடுத்து வைத்துள்ளார். 
 
இதேபோன்று அவரது பெண் நண்பர் பிரியன்னா தென்சன் (16) என்ற மாணவியும் தனது நிர்வாண படங்களை செல்ஃபியாக எடுத்து வைத்துள்ளார். 
 
இருவரும் தங்களது ஆபாச படங்களை கையடக்கத் தொலைபேசிகளில் பரிமாறிக்கொண்டதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காப்பன்னிங் மற்றும் தென்சன் இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது தங்களது குற்றங்களை ஒப்புக்கொண்டனர். 
 
மாணவி தென்சனுக்கு குறைந்த அளவில் தண்டனை விதிக்கப்படும்  மாணவனுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அங்கு 16 வயதுக்குட்பட்டவர்கள் தமது கைப்பேசிகளில் ஆபாச படங்களை வைத்திருக்க கூடாது என்ற சட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்