கதாரில் கனமழை : மோசமான கட்டுமான பணிகள் குறித்து விசாரணை

வியாழன், 26 நவம்பர் 2015 (15:39 IST)
அரேபிய நாடுகளில் ஒன்றான கதாரில் நேற்று சில மணி நேரங்கள் பெய்த மழையில், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


 
 
கதாரில், பல வருடங்களுக்குப் பிறகு நேற்று நான்கு மணி நேரம் கனத்த மழை பொழிந்தது.  அதில் சில இடங்களில் வெள்ளம் தேங்கியது. பல இடங்களில் சாலைகளில் சேதமடைந்தது. ஏராளமான கார்கள் தண்ணீரில் மூழ்கின. 


 

 
நான்கு மணி நேரம் பெய்த மழைக்கே, சேதமடைந்த கட்டுமானங்கள் குறித்து அந்த நாட்டு அரசு கவலை கொண்டுள்ளது. இது தொடர்பாக  அந்த நாட்டின் அதிபர் சேக் அப்துல்லா விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இவர் அந்த நாட்டின் உள்துறை அமைச்சராகவும் உள்ளார்.


 

 
சம்பந்தப்பட்டவர்கள் அரசு உழியர்களாக இருந்தாலும் சரி, தனியார் நிறுவனங்களாக இருந்தாலும் சரி, அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.எண்ணை வளம் மிக்க இந்த நாட்டில்தான் 2022 ஆண்டிற்கான உலக கால்பந்து போட்டி நடக்க உள்ளது.   கோடை காலத்தில் இங்கு கடுமையான வெயில் இருக்கும் என்பதால், கால்பந்து போட்டியின் ஒருங்கினைப்பாளர்கள் கதாரில் முதன் முறையாக 2022 ஆம் வருடம் நவம்பர் மற்றும் டிசம்பரில் அங்கு போட்டியை நடத்த திட்டமிட்டிருந்தார்கள்.


 
 
கதாரின் விமான நிலையத்திலும் மழை கொட்டியது. இருந்தாலும் விமான சேவை நிறுத்தப்படவில்லை. கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு அங்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏராளமான கடைகள் மூடப்பட்டுள்ளன. அமெரிக்க தூதரகமும் மூடப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்